Rock Fort Times
Online News

இடைத்தேர்தலில் களம் இறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்: தாராபுரத்தில் சி.பி.ஐ, மதுராந்தகத்தில் சி.பி.எம் போட்டி…! 

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடதுசாரிகளின் கூட்டணி முடிவின்படி தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ), மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.எம்) போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

சிபிஎம் மாநிலச் செயலாளர்,

பெ. சண்முகம் திருச்சியில் அளித்த பேட்டியில், “இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலைச் சந்திக்கிறோம்” என்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்