Rock Fort Times
Online News

20-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படாது-போய் ஏமாறாதீங்க…!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 2 நாட்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜூன் 15-ந்தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, ரேஷன் கடை திறந்திருக்கும் என குடும்ப அட்டைதாரர்கள் சென்று ஏமாற வேண்டாம்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்