Rock Fort Times
Online News

“நீட்” மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்…!

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே, இந்த நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன.
மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்தக் கோரி 36 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றம் இன்று(18-07-2024) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது சென்னை ஐஐடி சார்பில் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். நீட் முறைகேடு குறித்த ஆய்வறிக்கையை தயாரித்த இயக்குனர், தேசிய தேர்வு முகமையில் உறுப்பினராக இல்லை என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து வினாத்தாள் கசிவு நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வை ரத்து செய்வோம். மனுதாரர் தரப்பின் வாதங்கள் ஏற்புடையதாக இருந்தால் அவர்கள் கூறக்கூடிய அம்சம் அடிப்படையில் விசாரிக்க தயார். விசாரணை ஒரு இலக்கில் செல்கிறது, சிபிஐ எங்களிடம் சொன்ன விஷயங்களை வெளியிட்டால் அது விசாரணையை பாதிக்கும். ஆகவே, நடத்தப்பட்ட நீட் தேர்வை தற்போதைக்கு ரத்து செய்ய இயலாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் .

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்