சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இதற்கான அறிவிப்பு கடந்த 16ம் தேதி வெளியானது. இந்நிலையில் மகாதேவன், கோடிஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று(18-07-2024) பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. தலைமை நீதிபதியையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். அதேபோல, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக கிருஷ்ணகுமார் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.