திருச்சி, திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் அவல நிலை… * இடுகாட்டிற்கு பாதை வசதி அமைத்துத்தர கோரிக்கை… (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டாரப்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி பொது மக்கள் அருகில் உள்ள கிராமத்திற்கும், விவசாய நிலத்திற்கும், இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கும் தட்டான் குளம் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், தட்டான் குளம் வாய்க்காலில் பாலம் கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மழைக்காலங்கள் மற்றும் வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் செல்லும் போது பொதுமக்கள் தட்டான்குளம் வாய்க்காலில் இறங்கி கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
சமீபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் இறந்த நிலையில், அவரது சடலத்தை சேறும் சகதியுமாக இருந்த தட்டான் குள வாய்க்காலின் வழியாக தூக்கி சென்றனர். இதேநிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஆகவே திருவெறும்பூர் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.