தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி பெருநகரம் மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் இந்த மாதம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி துறையூர் கோட்டத்தில் நாளையும் ( 06.06.2023 ), ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 9-ந் தேதியும், லால்குடி கோட்டம் 13- ந் தேதியும், திருச்சி கிழக்கு 16-ந் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் 20ந் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 27ந் தேதியும் கூட்டம் நடக்கிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.