திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. இங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த சபிக் முகமது என்பவர் தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான சிறப்பு படை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த பூபதி சஞ்சய் (வயது 28) என்பவர் 2 இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது . அதைத் தொடர்ந்து பூபதியை போலீசார் கைது செய்தனர். 2 இளம் பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.