Rock Fort Times
Online News

பிரதமர் மோடி 27-ம் தேதி அரியலூர் வருகை: பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட திருச்சி விமான நிலைய பகுதிகள்…!

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து இங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறார். பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் ரோடு, வள்ளுவர் நகர், மாரியம்மன் கோவில் தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அந்நியர்கள் யாரும் வீடு எடுத்து தங்கி இருக்கிறார்களா? என்று வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது. வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?, எத்தனை ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வருகிறார்கள், புதிதாக குடியேறியவர்கள் யார், சொந்த வீடா, வாடகை வீடா? உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், வீட்டில் உள்ள வாகனங்களின் பதிவு எண்களையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டனர். பிரதமர் வருகையையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பாடத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்