திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை(25-11-2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ராம்ஜி நகர், கள்ளிக்குடி, சோழன் நகர், அரியாவூர், மேலபாகனூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையபட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது. இதேபோல வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், கீழகுமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ் நகர், பெல் நகரியம் சி மற்றும் பி பிரிவுகள், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, தொண்டைமான்பட்டி,திருநெடுங்களம், வாழவந்தான்கோட்டை தொழிற்பேட்டை பெரியார் நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.