Rock Fort Times
Online News

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று ( 28.06.2023 ) நடந்தது.
இதன் ஒரு பகுதியாக கே.கே.நகர் உடையான்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள ரிவேரா தெரு மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் மாநகராட்சி மற்றும் ஆல்ஃபா பள்ளி மாணவர்கள் இணைந்து புங்கன், வாகை, நாவல், வேம்பு, பூவரசு உள்ளிட்ட 500 மரக்கன்றுகளை நட்டனர். இதில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மண்டலத் தலைவர் துர்காதேவி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் மலர்விழி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதேபோல ஒவ்வொரு மண்டலம் வாரியாக மரக்கன்றுகள் நடப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்