பள்ளிகள் வரும் திங்கட்கிழமை ( 12.06.2023 ) திறக்கப்பட உள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாட சுமை இல்லாதவாறு சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்றார். மேலும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை, 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.