Rock Fort Times
Online News

பெருந்தலைவர் கக்கன்ஜி பிறந்தநாள்- காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

இன்று (18-06-23) பெருந்தலைவர் கக்கன்ஜி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவச் சிலையின் அருகே அவரது கக்கன்ஜியின் திரு உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு தொகுதி தலைவர் முகமது ரபிக் மாவட்ட பொது செயலாளர் நாச்சி குறிச்சி அருன்பிரசாத் வார்டு தலைவர்கள் பாலக்கரை மாரியப்பன் முருகன் கண்ணன் பெல்ட் சரவணன் கருப்பு கண்ணன் சிந்தை வினோத் ஸ்ரீராம் ஜெகதீஷ் செந்தில் முருகன் உப்பு சத்தியாகிரக தர்மராஜ் மணிவண்ணன் சுப்பிரமணி ரமேஷ் ராஜீவ் காந்தி வெங்கடேஷ் காந்தி சண்முகம் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்