Rock Fort Times
Online News

திருச்சி திருவெறும்பூர் ஊராட்சிகளில் கணக்காளராக வேலை பார்த்தவர்  கைது…

திருச்சி  மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு அகஸ்டு 8ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வரை இடைப்பட்ட காலத்தில் திருவெண்ணை கோவில் அருகே உள்ள கிளிக்கூடு பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் கனி என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார்.   வேலை பார்த்த பொழுது அரசு திட்ட நிதிகள், தற்செயல் நிதிகள், வரிக்குரிய தொகைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்தாமல் அவரது வாரிசுகளின் வங்கி கணக்கில் செலுத்தி ஏமாற்றி அரசுக்கு ஒரு கோடியே 36 லட்சத்து 67 ஆயிரத்து 438 ரூபாய்  நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளதாக மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி திருச்சி மாவட்ட குற்றப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

அதேபோல் கனி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு தேதி 27 ஆம் தேதி முதல்2022 ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை கணக்காளராக வேலை பார்த்து வந்த காலகட்டத்தில்  ஒரு கோடியே 57 ஆயிரத்து 601 ரூபாயை  சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்தாமல்   ஏமாற்றி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது சம்பந்தமாக திருவெறும்பூர் முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லதா இரண்டு புகார்கள் மீதும் தனித்தனியே வழக்கு பதிவு செய்ததோடு   கனியை  கைது செய்தனர். பின்னர் கனியிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து நேற்று மதியம் கனியின் வீட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்ததில்  சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனா்.   இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியா்  கனியை பணியிடை நீக்கம் செய்து  உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்