திருச்சி, ரெட்டை மலையிலிருந்து கருமண்டபம் செல்லும் கோரையாற்றில் முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக உய்யக்கொண்டான் ஆற்றங்கரை பகுதியில் ஒரு வாகன ஓட்டி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் ஒரு முதலை ஆற்றில் இருந்து ரோட்டை மெல்ல கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், தனது செல்போனில் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் அச்சத்தில் உறைந்தனர். திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றில் சமீப காலமாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. தற்போது கோரையாற்றிலும் முதலை நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடிக்க மாவட்ட நிர்வாகத்தினரும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.