திருச்சி விமான நிலையத்தில் பாக்கெட், பாக்கெட்டாக ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்…!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கவரித்துறையினர் தீவிரமாக சோதித்து வருகின்றனர். அந்தவகையில் சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த உடைமைகளில் பாக்கெட் , பாக்கெட்டாக வெளிநாட்டு சிகரெட் இருந்தன. மொத்தம் 50 ஆயிரம் சிகரெட் இருந்தன. அவற்றைக் கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூ.7 லட்சத்து 82 ஆயிரம் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். இதுதொடர்பாக அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.