Rock Fort Times
Online News

திருச்சியில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப். 1-ம் தேதி பொது ஏலம்…!

திருச்சி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பிப்ரவரி 1-ம் தேதி (சனிக்கிழமை) பொன்மலை ஆர்மரிகேட் பகுதியில் அமைந்துள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய வளாகத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் பொதுமக்கள் பங்கேற்று வாகனங்களை ஏலம் எடுக்கலாம். 1-ம் தேதிக்கு முன்பாக வாகனங்களை பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 9.30மணிக்கு ஆதார் அட்டை நகல் மற்றும் ரூ. 2000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து வாகனங்களை ஏலம் எடுக்கலாம். வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டியை செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம். இதில், இருசக்கர வாகனங்கள் 11, மூன்று சக்கர வாகனம் 1, நான்கு சக்கர வாகனங்கள் 5 என மொத்தம் 17 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன. இத்தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் என். காமினி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்