தமிழக சட்டத்துறையின் செயலாளராக ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சட்டத்துறை செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். சட்டத்துறை செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு பணியிலிருந்து மே 31, 2026 அன்று ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி, இன்று (ஜூன் 2) முதல் புதிய சட்டத்துறை செயலாளராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.