திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் மற்றும் டர்பன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாயை, குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்டுள்ள குடிநீர் உந்து குழாயுடன் இணைக்கும் பணி ஜூன் 4-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக, கம்பரசம்பேட்டை மற்றும் டர்பன் நீரேற்று நிலையங்களிலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி உள்ளிட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் ஜூன் 5-ம் தேதி ஒருநாள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.


Comments are closed.