Rock Fort Times
Online News

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை…* டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்..!

தமிழ்நாட்டின் 34-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று(03-06-2026) டிஜிபி அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர், மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜயை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி. மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில்
சைபர் குற்றங்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்