தமிழகத்தை பொறுத்தவரை 4 ஆயிரம் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. விஷேச நாட்களில் ஒரு நாள் வருவாய் ரூ.130 முதல் 200 கோடி வரை கிடைக்கிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் நாளை மறுதினம் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன்இணைந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைந்த தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments are closed.