கோடை விடுமுறைக்கு பின்பு தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில் தமிழ்நாட்டில் இன்னும் வெயில் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12- ம் தேதியும் , 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 14- ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.