Rock Fort Times
Online News

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை…!

முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மத்திய பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா, மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்