திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் ஏராளமான ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இங்கு திருச்சி சந்துக்கடை மாப்பிள்ளை நாயக்கன் தெருவை சேர்ந்த அப்துல் சலாம் (வயது 43) என்பவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார் . இந்த கடைக்கு துணி எடுப்பது போல் வந்த மூதாட்டி ஒருவர் அங்குள்ள துணிகளை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் அப்துல் சலாம் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் துணிகளை திருடியது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி தங்கப் பொண்ணு (வயது 60) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட துணிகள் பறிமுதல் செய்யப்பட்டது

Comments are closed, but trackbacks and pingbacks are open.