நாம் தமிழர் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும், கொள்கை பரப்புச் செயலாளருமாக இருந்து வருபவர் சாட்டை துரைமுருகன். இவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் நிதி திரட்டியதாக பரவலாக புகார் எழுந்தது. இந்த இந்த நிலையில், சிவகங்கை, தென்காசி, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் இன்று காலை முதல்என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருச்சி சண்முகா நகர் 7 வது கிராஸில் உள்ள சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் ஐந்து அதிகாரிகள் இன்று காலை 5.50 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. இவ்விசாரணைக்கு பிறகு அவரது வீட்டில் இருந்து இரண்டு புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அஅதிகாரிகள் எடுத்துச் சென்றத கூறப்படுகிறது. மேலும் மீண்டும் மறு விசாரணை அழைப்பாணையை நேரடியாக அவரது மனைவியிடம் கொடுத்த அதிகாரிகள் மீண்டும் என்.ஐ.ஏ அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்திச் சென்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.