மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” எந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி கிராமப்புறங்களில் கலெக்டர்கள் கிராமப்புறங்களில் தங்கி மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே ஆகும். இந்தத் திட்டத்தின்படி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று(31-01-2024) இரவு தங்கி மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து இன்று துறையூர் நகராட்சி உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்கறி வியாபாரி ஒருவர் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த விலையை விட வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வதை கண்டறிந்து இதுபோல் கூடுதலாக விற்பனை செய்தால் வாடிக்கையாளர்கள் எவ்வாறு வாங்குவார்கள்? என கேள்வி எழுப்பியதுடன் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து க. கொத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்த பின்னர் பள்ளி மாணவர்களோடு அமர்ந்து தானும் உணவருந்தினார்.
இந்த ஆய்வுகளின் போது துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.