Rock Fort Times
Online News

காந்தி மார்க்கெட்டில் இருந்து பால் பண்ணை செல்லும் தஞ்சை புதிய தாா் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்….

அதிகாாிகளுக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உத்தரவு...

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் இருந்து பால் பண்ணை செல்லும் தஞ்சை சாலை பாதாள சாக்கடை பணி நிறைவுற்றதை அடுத்து புதிய தார் சாலையை விரைந்து அமைத்து தருமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்  உத்தரவிட்டார்.   மேலும்  திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு அருகில் அமைந்துள்ள அண்ணா அறிவியல் மையம் ,கோளரங்கத்தை பாா்வையிட்டு  எம்எல்ஏ   இனிகோ இருதயராஜ்  ஆய்வு செய்தாா்.  இந்நிகழ்வில் பொறியாளா்கள் லோகநாதன், இப்ராஹிம், ராஜா மற்றும் பகுதி கழக செயலாளர் RGS பாபு, வட்டக் கழக செயலாளர்கள் சிலம்பரசன், சாகுல் ,கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார்  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்   உடன் இருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்