தன்னாட்சி அங்கீகாரம் புதுப்பிக்கும் பணியில் அலட்சியம்: திருச்சி அரசு கல்லூரியில் 21 பேருக்கு ‘மெமோ’…
திருச்சியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி காலாவதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி முதல்வர் தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிக்கும் பணிகளில் அலட்சியமாக இருந்தாகக் கூறி கல்லூரியின் அன்றைய தேர்வு நெறியாளர் வாசுதேவன், துணை தேர்வு நெறியாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட 21 பேருக்கு தற்போதைய கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளார். மேலும், தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக, அனைத்து பணி நாட்களிலும் பேராசிரியர்கள் அனைவரும் மாலை 4:30 மணி வரை (கூடுதலாக 2 மணி நேரம்) கட்டாயமாக கல்லூரியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதற்காக தனி வருகைப்பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.