2021-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று ( 24.08.2023 ) அறிவிக்கப்பட்டன. இதில், லெனின் இயக்கிய ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ தமிழ் திரைப்படத்திற்கு சிறந்த கல்வியியல் திரைப்பட விருதும், விஜய்சேதுபதி தயாரித்து நடித்து மணிகண்டன் டைரக்க்ஷன் செய்த ‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு சிறப்பு திரைப்பட விருதும் அறிவிக்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது ‘கண்டிதுண்டு, (மலையாளம்) தேர்வு செய்யப்பட்டது. ‘கருவறை’ ஆவண படத்துக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும், மலையாளம், ஹிந்தி, மணிப்பூரி, பெங்காலி, கன்னடம், மராத்தி உள்ளிட்ட திரைத் துறையை சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.


Comments are closed, but trackbacks and pingbacks are open.