ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமிர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமிர் ஆஜராக வேண்டும் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டுள்ளது. ரூ. 2000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை அமீர் இயக்கி இருந்தது குறிப்பிடதக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.