Rock Fort Times
Online News

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்: தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் பிடித்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்