Rock Fort Times
Online News

திருச்சி ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ஆய்வு…

திருச்சி கொட்டபட்டு ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ் இன்று (14.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு நடைபெற்ற விழாவில் 776 பயனாளிகளுக்கு ரூ.4.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 477 பயனாளிகளுக்கு ரூ. 3.44 கோடி மதிப்பீட்டில் கறவை மாட்டு கடன்களும், 173 பயனாளிகளுக்கு ரூ.2,491 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு பராமரிப்பு கடன்களும், 75 பயனாளிகளுக்கு ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் பால் பகுப்பாய்வு கருவிகளும், 9 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6000 மதிப்பீட்டில் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர வழங்கினார். முன்னதாக ஆவின் வளாகத்தில் புதிதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஐஸ்கீரிம் தயாரிக்கும் ஆலை கட்டுமான பணியினையும், வளாகத்தில் அமைந்துள்ள பால் பதப்படுத்துதல் தயாரிப்பு கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை நிர்வாக இயக்குனர் வினீத், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருநாவுகரசர் எம்.பி., முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந. தியாகராஜன், ஆவின் பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்