Rock Fort Times
Online News

திருச்சியில் அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்..

அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்..

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைவடிகால் திட்டப் பணிகள், சாலை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 15-வது நிதிக்குழு மானிய திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக்கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும், காலை உணவுத் திட்டம், நூலகங்களின் செயல்பாடுகள் குறித்தும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், டெல்டா மாவட்டங்களின் குறுவை தொகுப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டறிந்தார். பின்னர் அவர் திட்டப்பணிகள் அனைத்தையும் தொய்வின்றி விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்தியப்பிரியா ஐபிஎஸ் , மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பி. அப்துல் சமது, இனிகோ இருதயராஜ் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்