Rock Fort Times
Online News

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்- * முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி…!

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றி வணங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம். மாவீரன் பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கி, நெற்கட்டான் செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன், வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம் ! வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்