Rock Fort Times
Online News

திருச்சி, துவாக்குடியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முதல் வட்டார ஆலோசனைக் கூட்டம்…!

திருச்சி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முதல் வட்டார ஆலோசனைக் கூட்டம் துவாக்குடி சிட்கோ தொழிற் பேட்டையில் நேற்று(28-09-2025) நடைபெற்றது. கூட்டத்திற்கு 8D வட்டார தலைவர் செவாலியர் ப.வீரப்பன் தலைமை தாங்கினார். திருவெறும்பூர் லயன்ஸ் சங்கத் தலைவர் ஆர்.தனபாக்கியம், தஞ்சாவூர் அகரம் லயன்ஸ் சங்க தலைவர் ஆர். கவியரசன், திருச்சிராப்பள்ளி ஹெலன் கெல்லர் லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.எல்.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவெறும்பூர் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி ஹெலன் கெல்லர் லயன்ஸ் சங்கம், தஞ்சை அகரம் லயன்ஸ் சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் சங்கத்தின் முதல் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில், கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அந்தந்த லயன்ஸ் சங்கம் சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. மேலும், சங்க நிர்வாகிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். கூட்டத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி லயன்ஸ் சர்வதேச தலைவர் ஏ.பி.சிங் திருச்சி வருகை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில் திருவெறும்பூர் லயன்ஸ் சங்க செயலாளர் ஜி.பரம தயாளன் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்