நாடாளுமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்-திருச்சி மத்திய மாவட்ட திமுக கூட்டத்தில் முடிவு…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் இன்று (25-02-2024) நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* திமுக தலைவர், தமிழக முதல்வர், திராவிட மாடல் ஆட்சி நடத்தி இந்தியாவில் உள்ள மாநில முதல்வருகளுக் கெல்லாம் முதல்வராக திகழும் மு.க.ஸ்டாலின் 71 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்களில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கி மிகச்சிறப்பாக கொண்டாடுவது.
* வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரையாக திருச்சி மத்திய மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்களில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரம் நடத்துவது.
* தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், அரசின் நிதி நிலை அறிக்கை விளக்கும் பொது கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தலைமை கழக அறிவிப்பின்படி நடத்துவது.
* நாடளுமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு திருச்சி மத்திய மாவட்டத்தின் சார்பில் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பழனியாண்டி எம்.எல்.ஏ., அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் முத்துச் செல்வம், அல்லூர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் சேர்மன் துரைராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், ராம்குமார், இளங்கோ, கவுன்சிலர்கள் நாகராஜன், கமால் முஸ்தபா, கனகராஜ், ஒன்றியச்செயலாளர்கள் கதிர்வேல், மாத்தூர் கருப்பையா, தொகுதி பொறுப்பாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, சந்திரசேகர், பொதுக் குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், செவந்திலிங்கம், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், தில்லைநகர் கண்ணன், மாநகர துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் கலைச் செல்வி, எம்.ஏ.எஸ் மணி, பொருளாளர் டோல்கேட் சுப்பிரமணி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, அந்தோணிசாமி, சோழன் சம்பத், முத்துப்பழனி, மூவேந்திரன், பந்தல் ராமு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.