திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் லால்குடியை சேர்ந்த வக்கீல் பிரகலாதன்( வயது 38) என்பவர் இன்று ( 29.06.2023 ) காலை அறை எடுத்து தங்கினார். சிறிது நேரம் கழித்து தங்கும் விடுதி ஊழியர் சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சமயபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகலாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வக்கீலுக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed, but trackbacks and pingbacks are open.