முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு: திண்டுக்கல்லில் 3 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை…!
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் இன்று (05-08-2024) சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் நகர் முனிசிபல் காலனியில் உள்ள ஸ்கைவே டிரேடர்ஸ் அலுவலகம், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள ஸ்கைவே டிரேடர்ஸ், குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டையில் உள்ள லட்சுமி ஸ்பின்னிங் மில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான சில ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.