Rock Fort Times
Online News

அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்…

மக்களவைக்குள் நேற்று திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதே போன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர். இவர்கள் 4 பேரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை மக்களவை கூடியவுடன் இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பேசினார்.

இந்நிலையில், மக்களவையில் பாதுகாப்பு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என் பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, எம்.பி.க்கள் கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத் ஆகிய 9 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து கூட்டத்தொடர் நிறைவுபெறும் வரை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மக்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்