Rock Fort Times
Online News

மண்ணச்சநல்லூரில் வாக்காளர் பட்டியலில் பலரது பெயர் இருமுறை இடம் பெற்றுள்ளதால் குழப்பம்…

வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18 வயது பூர்த்தியானவர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 292, 293 ஆகிய இரண்டு எண்களிலும் ஒருவரது பெயர் இரு முறை இடம்பெற்றுள்ளது. இதேபோல, உளுந்தங்குடியைச் சேர்ந்த சேகர் என்பவரது பெயர் வரிசை எண் 78 மற்றும் 79ல் இரு முறை இடம் பெற்றுள்ளன.
மேலும், இறந்தவர்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் அதிமுக நகர செயலாளர் துரை சக்திவேல் கூறுகையில், வாக்காளர்கள் பார்வைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை சரிபார்த்த போது பெரும்பாலானவர்கள் பெயர் இரு முறை இடம்பெற்றுள்ளது. மேலும், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் அவர்களது பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும். இல்லையெனில் தலைமைக் கழகத்தில் பேசி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்