Rock Fort Times
Online News

பேருந்தில் 5 பவுன் நகைகள் ரொக்கம் மாயம்..

திருச்சி, பாப்பாக்குறிச்சி காட்டூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி கலைச்செல்வி (64). இவர் , திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். திருவானைக்காவல் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் சங்கிலி, அரை பவுன் மோதிரம், ரூ. 3000 ரொக்கம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்