Rock Fort Times
Online News

திருச்சியில் காதல் திருமணம் செய்த ஐ.டி.ஊழியர் தற்கொலை…!

திருச்சி உய்யகொண்டான் திருமலை 4 -வது கிராஸ் எம்.எம்.நகரை சேர்ந்தவர் பீட்டர் அமர்நாத் .இவரது மகன் லியோ டேனி (வயது 28). இவரும், அதே பகுதியை சேர்ந்த யசோதை என்பவரும் காதலித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். லியோ டேனி திருச்சியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், வேலை முடிந்ததும் வீட்டிற்கு தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் தாமதமாக லியோ டேனி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை மனைவி தட்டி கேட்டுள்ளார். இதனால், கோபத்துடன் அறைக்கு சென்ற  லியோ டேனி,  அங்குள்ள மின்விசிறியில் காதல் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.  இதனைப் பார்த்ததும்  யசோதை கதறி துடித்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து யசோதை கொடுத்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்