திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துகள் விபத்தில் சிக்கின! மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய 3 பேருந்துகள்; 120-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் புறவழிச்சாலையில் அடுத்தடுத்து மூன்று அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று, மதுராந்தகம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தால் நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பேருந்து சாலையின் மையப்பகுதியில் ஏறி விபத்துக்குள்ளானது. அப்போது, பின்னால் வந்த மேலும் இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த மோதலில் மூன்று பேருந்துகளும் சாலையோரம் சென்றடைந்தன. இந்த மூன்று பேருந்துகளிலும் சுமார் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மூன்று அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தால் ஏற்பட்ட நிலைதடுமாற்றமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.