Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம், மேலூரில் உள்ள ஸ்ரீ காயத்ரி அம்பா ஞானபீடத்தில் வாஸ்து பிரம்ம மஹா ஹோமம்…* வருகிற 6-ம் தேதி நடக்கிறது..!

திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூரில், காடைப்பிள்ளை அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி அம்பா ஞானபீடத்தில் வாஸ்து பிரம்ம மஹா ஹோமம்
வருகிற 06-09-2026(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. நிலம், மனை, வீடு, கட்டிடங்கள் உருவாக்கும் வல்லுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஷேமத்திற்காக இந்த வாஸ்து ஹோமம் நடக்கிறது. இந்த வாஸ்து பிரம்ம ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம், மூல மந்திர ஆராதனை செய்து ஹோம ஆஹுதி கொடுப்பதன் மூலம் ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீவாஸ்து பகவான் அருளாசியுடன் நிலங்கள், மனைகள், வீடுகள், அபார்ட்மென்ட் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பெரிய, சிறிய நகர, ஊர் கட்டுமானங்கள் உருவாக்கி வணிகம் செய்வோரும், அவற்றை வாங்கி பயன் அடைவோரும் சகல நன்மைகளையும், ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.

ஒரு புதிய நிலம், மனை வாங்கும்போது, நிலத்தில் கட்டிடம் கட்டத் தொடங்கும் போது, புதிய வீட்டில் குடிபுகும் போது, அல்லது இருக்கும் இடத்தில் வாஸ்து தோஷங்கள், கிரக தோஷங்கள், எதிர் மறை சக்திகள் போன்றவற்றின் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெற இந்த மூல மந்திர கூட்டு பிரார்த்தனை ஹோமம் பலன் தரவல்லது. நிலம் வாங்கி சீர்திருத்தம் செய்யும்போது அங்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து மூலக் கூறுகளையும் சமன் செய்து அந்த இடத்தில் பஞ்சபூத சமநிலை கொண்டுவர இந்த பிரார்த்தனை ஹோமம் உதவுகிறது. மனைகள், கட்டிட அமைப்பில் அல்லது திசைகளில் ஏற்படும் சிறிய, பெரிய வாஸ்து குறைபாடுகளால் உண்டாகும் தீய விளைவுகளை இந்த ஹோமம் கட்டுப்படுத்துகிறது. தங்கள் மனையின், நிலத்தின் பழைய வரலாறுகள் மூலம் ஏற்படும் சகலவித தோஷங்களையும் நீக்குகிறது.

கட்டிடப் பணிகள் தடையின்றி நடத்தல்:

புதிய வீடு அல்லது கட்டிடம் கட்டத் தொடங்கும், கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்கள், தடைகள் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்பட்டு பணிகள் சுமுகமாக நிறைவடையும்.
கிரக, வாஸ்து கோளாறுகளால், சல்லிய தோஷங்களால் வீட்டிலும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடையேயும், உறவினர்களுடனும் ஏற்படும் வீண் தகராறுகள், மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமையும், அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களுக்கு மன நிம்மதியும், நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் சுபிட்சமும். வளரும். இந்த வாஸ்து பிரம்ம மஹா ஹோமம் வணிகத்தில் உள்ள தடைகள் நீங்கி கடன்கள் தீர்ந்து, தொழில் வளர்ச்சி பெற்று, தன வரவும், சொத்து சேர்க்கையும் அதிகரிக்க வழிவகுக்கும். துர்சக்திகள், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை அதிர்வுகளிலிருந்து அந்த இடத்திற்கும், அங்கு வாழ்பவர்களுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவுகள் மற்றும் நோய்களின் தீவிரத்தை குறைத்து ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தருகிறது. தங்களின் தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், வீடுகள், வீட்டு மனைகளில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க பூமாதேவி, வாஸ்து புருஷன், அஷ்டதிக் பாலகர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத சக்திகளின் அருள் பெற்று நிலம், கட்டுமான தொழில், வணிகங்களில் அபரிமித வளர்ச்சி பெற அனைவரும் இந்த ஹோமத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு விழாக் குழுவினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தகவல் தேவைப்படுவோர் 94867 08726 மற்றும் 96262 58274 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்