Rock Fort Times
Online News

தாளாத துயரம்! திருச்சி, நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ மூச்சுத்திணறலுக்கு பலி!

திருவெறும்பூர் அருகே  உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் ராஜ்மோகன். இவர் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஆறு நாட்கள் தற்செயல் விடுப்பு பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக  அங்கு சென்றிருந்தார். இன்று பகல் 12 மணியளவில் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கெனவே ராஜ்மோகன் இறந்திருந்தது தெரியவந்தது. இவரது உடல் கேரள மாநிலம் பாளையம் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. காவல் சிறப்பு ஆய்வாளர் ராஜ்மோகன் உயிரிழந்தது சக காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. எஸ் எஸ்.ஐ ராஜ்மோகன் கொட்டப்பட்டு பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்