
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் துணை மேயர் திவ்யா மற்றும் நகரப் பொறியாளர் சிவபாதம் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும், கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா, செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், லோகநாதன் மற்றும் கவுன்சிலர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.