Rock Fort Times
Online News

திருச்சியில் வருமான வரித்துறை “ரெய்டு” -(படங்கள்)

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான

வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்கும் வகையில், வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் 8 முன்னணி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை

திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரவு எட்டு மணி முதல் சோதனை மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் வருமான வரி சோதனை தேர்தலை ஒட்டி நடைபெற்று வந்தாலும், திருச்சியில் இது முதல் சோதனை என்பது குறிப்பிடத்தக்கது. 0

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்