நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்த முருகதாஸ் என்பவரது மகன் கவியழகன். இவன் செம்பியன்மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். முருகதாஸ் கூரை வீட்டில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அதிகாலை முதலே அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதற்கிடையே நேற்றிரவு முருகதாஸ் குடும்பத்தினர் தங்களது கூரைவீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கிய முருகதாஸ் குடும்பத்தினரை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இதில் கவியழகன் பலத்த காயமடைந்திருந்தார். அவரை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். அவனது தந்தை மற்றும் தங்கை சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.