Rock Fort Times
Online News

அதிமுக மதுரை மாநாட்டின் விளம்பர பிரச்சார வாகனம்….

பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தாா்....

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக தயார் செய்யப்பட்டுள்ள பிரச்சார வாகனத்தை இன்றையதினம் சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாநாட்டின் துவக்கபாடல் இந்த பிரச்சார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த பிரச்சார வாகனம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வருகின்ற 20ஆம் தேதி அதிமுக பொன்விழா மாநாட்டிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக வாகனம் இயக்கப்படவுள்ளது. இந்தப் பிரச்சார வாகன சுற்றுப்பயணத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார வாகனம் மற்றும் மாநாட்டின் துவக்க பாடல் ஆகியவற்றை துவக்கி வைத்துள்ளார். இந்த பிரச்சார வாகனம் துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 Comment
  1. newssignet.space

    newssignet.space

    அதிமுக மதுரை மாநாட்டின் விளம்பர பிரச்சார வாகனம்…. – Rockfort Times

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்