Rock Fort Times
Online News

மிஸ் பண்ணிடாதீங்க.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. இந்தியன் ரெயில்வேயில் வேலை..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரெயில்வே. மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரெயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள்
பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ரெயில்வே தேர்வு வாரியம் (RRB) இந்திய ரெயில்வேயில் செக்சன் கண்ட்ரோலர் (Section Controller)பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 119 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எனவே இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 01.07.2026 அன்று 20 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். ரூ. 35,400 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு
5 ஆண்டுகளும், பெண்களுக்கு 40 வயது வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் திறனாய்வுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2026 ஆகும். மேலும், இதற்கான தேர்வு தமிழிலும் நடைபெறும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்