திருச்சி கண்டோன்மென்ட் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் பிரவீன் அடைக்கலராஜ் (39). இவர் சம்பவத்தன்று இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
டிஇஎல்சி கிறிஸ்தவ ஆலயம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்ற போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 சிறுவர்கள் திடீரென்று பிரவீன் அடைக்கலராஜ் அருகில் வந்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரவீன் அடைக்கலராஜ் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமை தபால் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் தான் போலீஸ் ஏட்டுவிடம் செல்போனை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 சிறுவர்களையும் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
1
of 901
Comments are closed.